மும்பையை அசால்ட்டாக எண்ணி விடாதே…! “நம்பர் ஒன்” குஜராத்தை வீழ்த்தியது.

ஐபிஎல் லீக் சுற்றின் 51 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டேபிள் உச்சத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசியில் இருக்கும் மும்பை அணியும் விளையாடிய இந்த போட்டியின் மூலம் மற்ற அணிகளின் புள்ளிக்கணக்கில் மட்டுமே மாற்றங்கள் வரும் என்பதாலும், குஜராத் ஏற்கனவே நல்ல பார்மில் இருப்பதனாலும் இந்த போட்டி கணிக்க கூடியதாகவே இருந்தது. மும்பை வெற்றி பெறுவது பற்றி யாரும் யோசிக்கவே தயாராக இல்லை.

டாஸ் வென்ற குஜராத் அணி மும்பையை பேட்டிங் செய்ய பணித்தது. ஆனால் எதிர்பார்க்காத விதமாக மும்பை அணியின் பேட்டிங் சூடு பிடித்தது. நீண்ட நாட்களாக சரியாக விளையாடாத ரோஹித் சர்மா பந்துகளை விரட்டி கொண்டிருந்தார். இஷான் கிஷன் – ரோஹித் சர்மா ஜோடி அடித்த அடியில் 7 ஓவர்களுக்கே 70 ரன்களை கடந்தது மும்பை.

ரோஹித் சர்மா ஆட்டம் இழக்க, பின்பு வந்த ஆட்டக்காரர்கள் ஓரளவு ரன்களை சேர்த்துக்கொண்டிருக்க, டிம் டேவிட் சூறாவளியாய் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் இழக்காமல் இருந்த டேவிட், மும்பை அணியை 177 ரன்களுக்கு அழைத்து சென்றார்.

மும்பையின் முதல் இன்னிங்ஸ் முடிவுற, 178 ரன்களை துரத்தி ஆடும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரிதிமன் ஷா – சுப்மன் கில் ஜோடி, நிதானமாக ஆடி இலக்கை துரத்தினர். 12 ஓவருக்கு 100 ரன்களை கடந்த இந்த ஜோடியை முருகன் அஸ்வின் பிரித்து வைத்தார். பின்பு வந்தவர்கள் நிதானமாக ஆடினாலும் மும்பை அணி பௌலிங்கில் அவர்களை கட்டுப்படுத்தினர். ஒரு பக்கம் மில்லர் அதிரடி காட்டினாலும், மும்பை அணி, குஜராத்தை 172 ரங்களுக்குள் சுருட்டியது.

யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது, மும்பை ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது போட்டியை இழந்து இருந்தாலும் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது குஜராத்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…