டெல்லியை அடித்த கில்லி! CSK அதிரடி வெற்றி!!!

ஐபிஎல்-ன் 55 வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின, வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் க்கு தகுதி பெற முடியும் என்ற முனைப்போடு இறங்கிய டெல்லி அணி, டாஸ் வென்று பௌலிங்கை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் செய்த மிக பெரிய தவறு அதுவாக தான் இருந்திருக்க முடியும்.

முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணியின் “டேவன் காண்வே – ருதுராஜ் கெய்க்கவாட்” ஜோடி டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதிலும் டேவன் காண்வே வை கட்டுப்படுத்த டெல்லி வீரர்கள் பலவாறு போராடினர். ஒரு பக்கம் ருதுராஜ் அதிரடியாக ஆட, சென்னை அணி 11 ஓவருக்கு 100 ரன்களை கடந்தது.

பின்பு ருதுராஜ் ஆட்டம் இழந்ததும் சிவம் துபே வந்தார். அவர் பங்குக்கு அவரும் அடித்து ஆட… சென்னை அணியின் ஸ்கோர் உயர்ந்த வண்ணம் இருந்தது. இன்னிங்சின் கடைசியில் தோனி அதிரடி காட்ட சென்னை அணி 208 ரன்கள் எடுத்து இன்னிங்க்ஸை முடித்து கொண்டது. டெல்லி அணியின் நோர்ட்ஜெ 3 விக்கெட் கைப்பற்றினார்.

209 என்ற பெரிய இலக்கை துரத்தினால் மட்டுமே வெற்றி பெறலாம் என்று ஆடிய டெல்லி அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் குடுத்தது சென்னை அணி. அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியபடி இருந்தது. இடையில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் போராடி ரன்கள் அடிக்க, சில சிக்ஸர்களை அடித்தாலும் விக்கெட் தொடர்ந்து விழுந்த வண்ணம் இருந்தது, இறுதியில் 17.4 ஓவர் முடிவுகளில், 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது டெல்லி அணி.

இதன் மூலம் டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் சரிந்தது. தான் வெளியேறுவது இல்லாமல் டெல்லி அணியின் நிலையையும் சரித்து இருக்கிறது சென்னை.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…