ஏ.ஆர்.ரகுமான் பெயரை வைத்து கைவரிசை காட்டிய கில்லாடி பெண்கள்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?

சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிகளுக்கு கேமரா தேவை என வாடகைக்கு எடுத்து பல கேமரா ஸ்டூடியோ நிறுவனங்களை மோசடி செய்த இரண்டு பெண்களை பாதிக்கப்பட்டவர்களே கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது போன்று பெண்கள் வாடகைக்கு கேமரா வேண்டும் எனக் கூறி மோசடி செய்யும் பெண்கள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பார்த்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்களில் சிலர் தாங்களும் இது போன்று கேமராவை இழந்துள்ளதாக அடுத்தடுத்து பதிவுகளை போட்டுள்ளனர்.

இவ்வாறாக 10க்கும் மேற்பட்டோர் இடம் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை சுமங்கலி மற்றும் லட்சுமி இருவரும் ஏமாற்றி வாங்கிச் சென்றது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கேகே நகரில் உள்ள மற்றொரு ஸ்டூடியோவில் இரண்டு பெண்கள் கேமரா வாடகைக்கு கேட்டுள்ளனர்.அப்போது வாட்ஸ்அப் பதிவு மூலம் உஷாரான ஸ்டூடியோவின் உரிமையாளர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவலர்களுக்கு தகவல் கொடுத்து கையும் களவுமாக சுமங்கலி மற்றும் லட்சுமி தேவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்

விசாரணை செய்ததில் பலே கில்லாடிகளாக இரண்டு பெண்களும் நூதன முறையில் பல ஸ்டூடியோக்களில் கேமராவை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.

குறிப்பாக சுமங்கலி மற்றும் லட்சுமி சினிமா நிகழ்ச்சிகளில் மீடியாவில் வேலை பார்ப்பதுபோல் பலரிடம் பழகி நட்பை வளர்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. அவர்கள் மூலமாக கேமரா பற்றிய பல்வேறு தொழில்நுட்ப தகவல்களை தெரிந்து கொண்டுள்ளனர்.

அவ்வாறு பழக்கமான நபர்களிடம் குறும்ப ற்காகவும் ,சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிக்காகவும் கேமராக்கள் வாடகைக்கு யாரும் கொடுக்கிறார்களா என கேட்டு தகவல் சேகரித்துள்ளனர். அதன்பின் அவர்கள் பெயரை பயன்படுத்தி கேமரா வாடகைக்கு விடும் ஸ்டூடியோ நிறுவனங்களை அணுகி விலை உயர்ந்த கேமராக்கள் மற்றும் லென்சுகளை பெண்கள் வாடகைக்கு பெற்றுள்ளனர்.

சினிமாவில் தெரிந்த நபர்கள் மூலமாக இந்த 2 பெண்களும் கேமராவை வாடகைக்கு கேட்பதால், அதனை நம்பி ஸ்டுடியோ நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கேமராக்களை கொடுத்துள்ளனர்.

கேமராவை கொடுக்கும்போது பெண்கள் இருவரும் பல ஆவணங்களை கொடுத்து குறைந்த பட்சம் பத்து நாளைக்கு வாடகைக்கு எடுத்துச் செல்வதாக ஸ்டூடியோ நிறுவனம் நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல் 4,5 நாட்கள் கேமரா விற்கான கைகளை கொடுத்து இரண்டு பெண்களும் நிறுவனத்தின் நம்பிக்கையை பெறுகின்றனர். அதன்பின் மேலும் சில நாட்கள் கேமராக்கள் வாடகைக்கு தேவைப்படுகிறது எனவும்,மேலும் சில விலை உயர்ந்த கேமராக்களையும் வாடகைக்கு வாங்கிச் சென்றதாகவும் ஸ்டூடியோ நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் திடீரென பெண்கள் திடீரென ஸ்டுடியோ நிறுவனத்திற்கு மறைத்து கேமராக்கள் காணாமல் போய் விட்டதாக கூறி ஏமாற்றியதாக வும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தாங்களே கேமராவை கண்டுபிடித்து தருவதாகவும் இல்லை எனில் அதற்கான பணத்தை கொடுப்பதாகவும் பெண்கள் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி காத்திருந்து தங்களைப் போன்ற பலரும் தனித்தனியாக ஏமாந்து உள்ளதாக ஸ்டூடியோ நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சினிமா செய்திகளை தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் நிகழ்ச்சிகள் இருப்பதாக கூறி கேமராக்களை வாடகைக்கு எடுத்தது தெரியவந்துள்ளது.

இறுதியாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வீட்டு திருமண நிகழ்ச்சி பற்றி தெரிந்துப்கொண்டு,அதற்கு கேமரா தேவை என கூறி கேமரா வாங்கி சென்று ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று எத்தனை பேரை ஏமாற்றியுள்ளனர் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாடகைக்கு வாங்கி சென்ற கேமராக்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…