மருத்துவப்  படிப்புக்கான விண்ணப்ப தேதி தொடக்கம்..! 

மருத்துவர் ஆக வேண்டும் என்ற  கனவு உள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 6,958 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,925 பி.டி.எஸ் இடங்கள் என மொத்தம் 8883 இடங்களுக்கான இணையதள விண்ணப்பங்கள் இன்று முதல் மாணவர்களிடமிருந்து பெறப்பட உள்ளன.

 இதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இன்று முதல் ஜனவரி 7-ஆம் தேதி மாலை 5 மணி வரையில்  இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்ப நகல் அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள்  ஜனவரி 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


www.tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *