வெங்காய பண்ணையில் வேலை – விண்ணப்பிக்கும் கேரள எம்.பி.ஏ, எம் .டெக் பட்டதாரிகள்!

இந்தியாவில் ஆண்டுதோறும் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இது போதாதென்று கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கினால் பல லட்சம்  பேர் தங்கள்  வேலையை இழந்தனர். நாடு முழுவதுமுள்ள மக்கள்  கணிசமான அளவில் தடுப்பூசி போட்டு கொண்டதால் , கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. அதனால் மீன்டும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தென்கொரியாவில் உள்ள வெங்காய பண்ணையில் பணியாற்றுவதற்கு ஆர்வமுடம் விண்ணப்பித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அனால் விண்ணப்பித்தலில் பெரும்பாலானோர்   எம்.பி.ஏ, எம் .டெக்  போன்ற படிப்புகளை படித்தவர்கள்.

வெளிநாட்டு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு (ODEPC) மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில், நேரில் பதிவு செய்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் தென்கொரியாவில் வெங்காயப் பண்ணையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கொச்சியில் இருக்கும் ODEPC அலுவலகம் முன்பு குவிந்தனர். எம்.பி.ஏ, டெக் பட்டதாரிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தென் கொரியாவில் இருக்கும் வெங்காய பண்ணைக்கான வேலைக்கு விண்ணப்பித்தனர்.

தென்கொரிய அரசு சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் வெங்காய பண்ணைக்கு முதற்கட்டமாக 100 பேர் தேர்வு செய்யப்பட்டுகின்றனர்.. 100 காலிப் பணியிடங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விணப்பித்துள்ளனர். ஆனால், அதிலிருந்து சுமார் 800 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். தேர்வு செய்யப்படுபவர்கள், தென்கொரியாவில் இருக்கும் தெற்குப் பகுதியில் சினான் மற்றும் முவான் தீவுகளில் உள்ள வெங்காய பண்ணையில் பணியாற்ற உள்ளனர்.

அவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,12,500 பெறுவார்கள். மாதம் 28 நாட்கள் வேலை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் 9 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய ODEPC அதிகாரி, இந்த வேலைக்கு மூன்று வகையான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாயத்தை உண்மையாக விரும்பும் குழுவினர் ஒரு தரப்பினர், இரண்டாவது தரப்பினர் தென்கொரியாவில் கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ளனர், முன்றாவது தரப்பினர், எங்கு எந்த வேலை கிடைத்தாலும் செய்ய தயாராக இருப்பவர்கள் என மூன்று வகையினர் இருப்பதாக கூறிய அவர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், 10 நாட்களில் தேர்வு நடைமுறைகள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *