வாகை சூடியதா? விஷாலின் வீரமே வாடை சுடும் திரைப்படம்!

இயக்குனர் து பா சரவணன் இயக்கத்தில் விஷால் கதநாகனாக நடித்து, டிம்பில் ஹையாதி கதாநாயகியாக நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இவர்களுடன் இணைந்து பாபு ராஜ், யோகி பாபு, மாரி முத்து, ரவீனா ரவி, அகிலன் புஷ்பராஜ், ராஜ செம்பலோ, இளங்கோ குமரவேல், துளசி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

கதாநாயகனாக வரும் விஷால் போரஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியின் மகனாக இருக்கும் விஷால் போலீசில் சேர விரும்புகிறார். அதற்கான தேர்வுகளை எழுதி வேலைக்காக காத்திருக்கும் ஒரு சாதாரண இளைஞன், பள்ளி பருவத்தில் இருந்தே கதாநாயகியை காதலித்து வருகிறார்கள் இருவரும். விஷாலுக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். வெடி படத்தில் எப்படி தங்கையை காப்பற்ற துண்டித்தாரோ, அதே போல் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் தங்கையை கொன்றவர்களை பழிவாங்க துடித்து வில்லனை தேடி அலைவதுதான் படத்தின் கதை.

முதல் பாதியில் விஷாலின் காதல் கதையும், நண்பன் யோகி பாபுவுடன் வரும் நகைச்சுவையும், தங்கைக்கும் விஷாலுக்குமான உருவாவு என படம் மெதுவாக நகர்கிறது. முதல் பத்தியில் போலீஸ் அதிகாரியாக ஆகா வேண்டும் என்ற ஆசையில் இருக்க, அப்போது அவர் அப்பாவிகளை வைத்து கேஸ்சை முடிக்கும் அதிகாரிகளை பார்த்து வெறுப்படைகிறார்.

படத்தில் தேவையற்ற பாடல்கள் எதுவும் இல்லை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கமலமாக இருந்தது. படத்தொகுப்பு மற்றும் ஒளிபதிவும் சிறப்பாக இருந்தது. இரண்டாம் பத்தியில் மூன்று கதை ஒன்று சேர்ந்து வில்லனை விஷால் கொள்வாரா? மாற்றாரா? என்பதை விறுவிறுப்பாக ஆக்ஷன் காட்சிகளுடன் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

புதிதாக இந்த படத்தில் எதையும் சொல்லவில்லை. காலம் காலமாக தமிழ் சினிமாவில் தங்கைகளை வைத்து கூறும் கதையை இயக்குனர் கொஞ்சம் மாடனாக கூறியிருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். படத்தில் சில இடங்களில் தொடர்ச்சி சரியாக இல்லை. ஒரு காட்சியில் விஷால் குண்டாகவும், அடுத்த காட்சியில் பிட்டாகவும் இருக்கிறது [படத்தின் தொடர்ச்சியை இழக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் நிறைத்து இருப்பதால் பேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள்.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….