வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர், தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். 

மும்பையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், நீட் தேர்வை முறையாக எழுத முடியவில்லை, எனவே தங்களுக்கு மறுதேர்வு நடத்தும்வரை இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. ஆனால் தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, ‘லட்சக்கணக்கானோர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் சூழலில் இரண்டு மாணவர்களுக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது சரியல்ல’ என கூறி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை அனுப்பி வைத்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தவர்கள் பட்டியல் தெரியவந்துள்ளது. அதன்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவர் எம். பிரவீனும், மாணவி எஸ்.ஏ. கீதாஞ்சலியும் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். சேலத்தை சேர்ந்த அர்ஜிதா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் கீதாஞ்சலி 23ஆவது இடத்தையும், பிரவீன் 30ஆவது இடத்தையும், அர்ஜிதா 60ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *