சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து பணி செய்யும் திமுக எம்.எல்.ஏ

அரசியலில் ஒரு கட்சி மற்றொரு கட்சியை விமர்சித்து பேசுவது ஒரு சாதாரண நிகழ்வே ஆகும். ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதும், திட்டங்கள் குறித்து விவாதம் செய்வதுமே ஒரு சிறந்த அரசியல். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் அரசியல் சூழல்கள் போற்றத்தக்கவாரில்லை. ஒரு கட்சியை குறித்து பேசாமல் தனி நபரின் வாழ்க்கை குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது. தனிநபரின் வாழ்வை குறித்துப் பேசுவதால் ஆங்காங்கே வன்முறைகளும் போராட்டங்களும் நடைபெறுகிறது. இது போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் சம்பத். இவருக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அரை ஒதுக்கப்பட்டுள்ளது தவிர அறையில் அமர்ந்து வேலை செய்வதற்கு தேவையான மேசை நாற்காலிகள் உள்ளிட்ட எதுவும் தரப்படவில்லை. இதனால் எம்எல்ஏ சம்பத் தரையில் உட்கார்ந்து அவரது பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும் தரையில் அமர்ந்தபடி தான் மக்களையும் சந்தித்து வருகிறார். அவருடைய எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருப்பதனால்தான் அவரை அவமான படுத்துவதற்கு ஆளும் அரசு இதுபோன்று செய்து வருகின்றது.

இதுகுறித்து எம்எல்ஏ சம்பத் கூறியதாவது ” சட்டப்பேரவை வளாகத்தில் நூறு சதுர அடி கொண்ட அலுவலகம் எனக்கு ஒதுக்கப்பட்டது. நான் சுமார் 40,000 பொது மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மக்கள் நலனுக்காக ஆளும் அரசை அதிக கேள்வி கேட்டதாலும் , மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில் சேர்க்கவும், ரூபாய் ஐந்தாயிரம் மழை நிவாரண நிதியாக அனைவருக்கும் வழங்க வேண்டுமென்றும் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் போராட அழைத்ததற்கும்  மற்றும் சாலை அமைக்க அரசை கண்டித்து சொந்த செலவில் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் பள்ளிகளை மேற்கொண்டதற்கும் ஆளும் அரசு என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று இதுபோன்ற செயல்களை செய்து வருகிறது.

நான் ஏழை எளிய குடும்பத்திலிருந்து தான் அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் என்னால் மேசை நாற்காலி இல்லையென்றாலும்  கவலை இல்லை.  தரையில் அமர்ந்து மக்கள் பணி செய்ய எனக்கு எந்த தயக்கமும் இல்லை.”ஆனால் இந்த அவல நிலையை உருவாக்கிய என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு விசாலமான அறை, சொகுசு நாற்காலிகள், சொகுசு கார்கள் வழங்க மட்டும் நிதி ஒதுக்குகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *