3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது

Farm_Law

கடந்த 2020ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை இயற்றியது. அதன்படி அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 என்ற சட்டமும், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைபடுத்துதல்) சட்டம் 2020 என்ற சட்டமும், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை என்ற சட்டமும் இயற்றப்பட்டது.இந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. இதனை தொடர்ந்து 3 சட்டங்களை எதிர்த்து ஒன்றரை வருட காலமாக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர்.

கடும் பனியோ, வெயிலோ விவசாயிகள் எதையும் பாராமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தினால் நிறைய விவசாயிகள் இறந்தும் போனார்கள். இந்த போராட்டத்தை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது.அந்த பேச்சு வார்த்தையில், விவசாய மக்களிடம் இந்த 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து செல்லும் மாறு சொல்லியதே தவிர சட்டங்களை ரத்து செய்ய மறுத்து வந்தது.இந்நிலையில் கடந்த 19ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அந்த உரையில் 2020-ம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற போவதாக அறிவித்தார். அதற்கான அரசாணையை இந்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது கையெழுத்திடப்படும் என்று அறிவித்தார். 

இந்நிலையில் மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை மக்களவையிலும் பிற்பகலில் மாநிலங்களவையிலும் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மூன்று வேளையும் சட்டங்களில் ரத்து செய்வதற்கான மசோதாவை இன்று தாக்கல் செய்து இருந்தார்.  இந்த சட்டங்களை ரத்து செய்வது குறித்து விரிவான விவாதம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கினார்கள்.அதனை தொடர்ந்து  தொடர்ந்து இரு அவைகளிலும் மூன்று கட்டங்களில் ரத்து செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *