இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சி..!

இந்தியாவில் உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி 10 முதல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பகுஜன் சமாஜ்வாதி கட்சி.

இந்த இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 6 பேருக்கு சீட் கொடுக்கப் பட்டுள்ளது. அவர்களுள் மூல் சந்திர சவுகான் தாம்பூர் விதான் சபா தொகுதியிலிருந்தும், முஹம்மது ரிஸ்வான் குண்டார்கி தொகுதியிலிருந்தும், யூசுப் கான் நவாப் கஞ்ச் தொகுதியில் இருந்தும், ஷாலினி சிங் தெற்கு ஃபரித்பூர் தொகுதியில் இருந்தும், பிரம்மானந்த சர்மா பரெய்லி தொகுதியில் இருந்தும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் கட்டமாக உத்தரபிரதேச தேர்தலுக்கு தனது 51 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், இன்று ஆறு பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் அடுத்த மாதம் பத்தாம் தேதி முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *