வேட்புமனுவைை தாக்கல் செய்யும் அகிலேஷ் யாதவ்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியிலிருந்து போட்டியிடுவதாக இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவர் அதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, இந்த வேட்புமனுத்தாக்கல் உத்தரப்பிரதேச வரலாற்றில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறது. இந்த வேட்புமனுத்தாக்கல் உத்திரப்பிரதேசத்தின் அடுத்த 100 ஆண்டுகளுக்கானா வரலாற்றை எழுதப் போவதாகும். அதில் அனைவரும் பங்கு எடுத்துக் கொள்ளுங்கள். நேர்மறையான இந்த அரசியலைப் பயன்படுத்தி எதிர்மறையாக செல்பவர்களை தோற்கடிப்போம். ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.