தள்ளிப்போன ராகுல் காந்தியின் கோவா வருகை..!

இந்தியாவில் உத்தரப் பிரதேசம்,உத்தரகண்ட், பஞ்சாப் மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 10 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதனையடுத்து,அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிற பிப்ரவரி 2 அன்று கோவா வருகை புரிய உள்ளார் எனக்கூறி இருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிப்ரவரி 2 ஆம் தேதி கோவா பயணம் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கும் விதமாக ராகுல் காந்தி கோவா வரவிருந்த நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், கோவா முதல்வர் பிரம்மோத் சவந்த் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் ராகுல் காந்தி.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ராகுல் காந்தி கோவாவிற்கு மேற்கொள்ளவுள்ள முதல் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது கோவா முதல்வரின் தொகுதியான சான்குலின் தொகுதியிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவை தொகுதிக்கு இதுவரை 587 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். கோவாவிற்கு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.