2021-22 புதிய ரயில்வே வழி திட்டங்களுக்கு 1000 ரூபாய் ஒதுக்கீடு 

2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிங்க் புக் என்று சொல்லப்படும் ரயில்வே திட்ட புத்தகம் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்துக்கான புதிய வழித்தட திட்டங்களுக்கான திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம்- நகரி; அத்திப்பட்டு- புதூர்; ஈரோடு -பழனி; சென்னை – கடலூர்; மதுரை- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக; ஸ்ரீபெரும்புதூர் –  கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை – ஆவடி; மொரப்பூர் –  தர்மபுரி அது 8 புதிய வழித்தட திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

        இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது காட்பாடி – விழுப்புரம் இரட்டை பாதை திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் – கரூர் –  திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு 1600 கோடி தேவை. ஆனால் வெறும் ஒன்றரை கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஈரோடு-கரூர் இரட்டை பாதை திட்டத்திற்கு 650 கோடி தேவை. ஆனால் ஒதுக்கப்பட்டுள்ளதோ வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே. தொடர்ந்து மூன்றாவது பட்ஜெட்டாக இப்படி மிகக் குறைந்த தொகையை தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் மதுரை போடியாகனூர் அகல ரயில் பாதை திட்டம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி பலமுறை முறையீடு செய்து அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டு 104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களது தொடர்ந்த கோரிக்கைக்கு செவிமடுத்து அதற்கு நன்றி விடுவித்துக் கொள்கிறேன்.

       தமிழக புதிய வழித்தட திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….