சமத்துவத்திற்கான சிலையை திறந்து வைக்கும் பிரதமர்..!

இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி ஹைதராபாத்திற்கு செல்ல உள்ளார். அங்கு அவர் 216 அடி உயரமுள்ள சமத்துவத்திற்கான சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்த சிலையானது 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி ஸ்ரீராமானுஜச்சாரியா உடையதாகும். அதனைத் தொடர்ந்த
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மதியம் 2:45 மணி அளவில் ஹைதராபாத்தில் அமைந்துள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி மற்றும் கல்வி வளாகத்திற்கு செல்ல உள்ளார். 50-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சர்வதேச பயிர் ஆராய்ச்சி மற்றும் கல்வி வளாகத்தில் கொண்டாட்ட விழாவை தொடங்கி வைக்க உள்ளார். அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் சமத்துவத்துக்கான ஸ்ரீராமானுஜச்சாரியா சிலையை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த சிலையானது ஐந்து அலோகங்களால் ஆனது. அவை, தங்கம், வெள்ளி, காப்பர், பித்தளை மற்றும் ஜிங்க் ஆகியவையாகும். இந்த சிலை உலகத்தில் உள்ள மிக உயர்ந்த சிலைகளில் ஒன்றாக திகழும். இந்த சிலை 54 அடி அகலமுள்ள பத்ர வேதி என்ற அடிப்பகுதியின் மேல் அமைய உள்ளது. அதில் நவீன டிஜிட்டல் நூலகம், ஆராய்ச்சி வளாகம், புகைப்பட கண்காட்சி ஆகியன அமைய உள்ளன.