ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இன்று காலை ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 9.45 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது காஷ்மீர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து 36.340 அடி நீளத்திற்கும் , 181 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.மேலும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல நகரங்களிலும், இஸ்லாமாபாத் மற்றும் வடக்கு பாகிஸ்தானின் பிற பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்(NCS) தெரிவித்துள்ளது. மேலும் பெஷாவர், லோயர் டியர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வாணமா தகவலும் வெளியாகவில்லை.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் குறித்து பிரதமர் நரேந்திர மோடி லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம் கேட்டறிந்துள்ளார்.