என்ன ஒரு புத்திசாலித்தனம்! உலகின் மிகப்பெரிய குளுகுளு கஃபே  

உலகப் புகழ்பெற்ற ஸ்கை-ரிசார்ட்,  குல்மார்க் என்ற இடத்தில் சுமார் 38 அடி உயரமுள்ள இக்லூ உணவகத்தை கட்டியுள்ளது.இதன் மூலம் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

குல்மார்க்கில் உள்ள கோலாஹோய் கிரீன் குரூப் ஆஃப் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸ் தான் இந்த உணவகத்தை கட்டியுள்ளது. இதே ஹோட்டல் தான் கடந்த ஆண்டு ஆசியாவின் மிகப்பெரிய இக்லூ கஃபேவை உருவாக்கியது, இது சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் வெகுவாக ஈர்த்தது.

இதுகுறித்து அந்த ஹோட்டல் நிறுவனரான சயீத் வசீம் ஷா கூறுகையில் சுவிட்சர்லாந்தில் இருக்கும்  இக்லூஸை உருவாக்கும் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், அதையே காஷ்மீரிலும் அறிமுகப்படுத்த நினைத்ததாகவும் கூறினார்.மேலும் குல்மார்க்கில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், ஜம்முவில் இதனை செய்ய முடியும் என்று நான் நினைத்தேன். அதனால் தான் இந்த ஹோட்டலை திறக்க முடிவு செய்தேன் என்று கூறினார்.இந்த ஹோட்டலில் சுமார் 40 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது உலகின் மிகப்பெரிய இக்லூ உணவகம் என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.வரும் 15-ம் தேதிக்கு பிறகு பனி உருகத்தொடங்கும் என்பதால், அப்போது இந்த உணவகம் மூடப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.