இதெல்லாம் நமக்கு தேவையா கோபி! இந்தியர்களை விமர்சித்த ஹ்யுண்டாய் நிறுவனம்

கடந்த 5ம் தேதி காஷ்மீர் ஒன்றிய தினத்தின் போது பாகிஸ்தானிய ஹ்யுண்டாய் நிறுவனம் இந்தியர்களை ஏளனம் செய்யும் வகையில் ஒரு டீவீட்டை பதிவிட்டது. அந்த டீவீட், “நம் காஷ்மீரி சகோதரர்களின் தியாகங்களை நாம் நினைவு கூறுவோம். மேலும் அவர்கள் தொடர்ந்து சுதந்திரத்திற்கு போராடுவதற்கு நாம் ஆதரவாக நிற்போம்” என்று ட்வீட் செய்திருந்தது. இந்த ட்வீட் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் உள்ளதாக இந்தியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஹ்யுண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டது. ஆனால் அந்த மன்னிப்பு போதுமானதாக இல்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.இதனை தொடர்ந்து டிவிட்டரில் #boycotthyundai என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.