பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள்..!

அருணாச்சலப் பிரதேசத்தின் காமெங் பகுதியில் கடந்த 6-ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் சிக்கினர். அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், 7 ராணுவ வீரர்களின் உடல்களும் இன்று மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.