உத்தரபிரதேச முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதம் வாக்குப்பதிவு..!

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. இந்த முதல்கட்ட வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 58 தொகுதிகளுக்கு நடைபெற்றது. அதில் 59.87 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.

உத்தர பிரதேச தேர்தலில் முதற்கட்டமாக ஜாட் பிரிவின மக்கள் அதிகம் இருக்கும் மேற்கு உத்தரபிரதேசத்தில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக ஷாம்லி மாவட்டத்தில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து முசாபர் நகரில் 65.32 சதவீதமும், மதுராவில் 62.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த முதல்கட்ட தேர்தலில் 623 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 14 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…