ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் மகள்..!

பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பாக முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் அவர்களின் மனைவி மற்றும் மகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் போட்டியிடும் பகவந்த் மானுக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் மகள் ஹர்சிதா கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் என்று தூரி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள் இருவரும் ஆம் ஆத்மி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் மகள் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில், இன்று அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஊடகத்துறையினரை ஊக்குவித்த மா.சுப்பிரமணியன்… என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு…