தேர்தல் தேதியில் மாற்றம்… தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு..!

உத்தரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக நடைபெறுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதற்கட்ட தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியமைத்திருக்கிறது. அதன்படி, முதற்கட்டத் தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திட்டமிட்டபடி மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…