600 மில்லியன் டாலருக்கு MX டகாடக்-யை விலைக்கு வாங்கிய ஷேர் சாட்!

இந்தியாவில் டிக்-டாக் வீழ்ச்சிக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூ-டியூப் ஷார்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கூட பயனாளர்கள் ஷார்ட் வீடியோக்களை தயாரிக்க ஏதுவாக அப்டேட்டுகளை கொண்டு வந்தன. அப்படி கடந்த 2020ம் ஆண்டு கொண்டு வரப்பட்டமோஜ் என்ற ஷார்ட் வீடியோ ஆப் கிடுகிடுவென நல்ல வரவேற்பை அடைந்துள்ளது.

ஷேர் ஷார்ட் நிறுவனத்தின் மோஜ் மற்றும் ஷேர் சாட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் ஷார்ட் பார்மெட் வீடியோக்களை பகிரும் ஆப் ஆன MX டகாடக் செயலியை 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 5,250 கோடி) ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை போட்டி போட்டு முந்தப் பார்த்து வரும் மோஜ் நிறுவனத்திற்கு பயனாளர்கள் எண்ணிக்கையைஅதிகப்படுத்த இது ஒரு நல்லவாய்ப்பாக அமையும் என ஷேர்சாட் மற்றும் மோஜ் நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனரானஅங்குஷ் சச்தேவா தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த மோஜ் மற்றும் MX டகாடக் நிறுவனங்கள் ஷேர் சாட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் என்றும், இந்த மகா சங்கமம் மூலமாக 100 மில்லியன் கிரியேட்டர்கள் மற்றும் 300 மில்லியன் மாதாந்திர பயனாளர்கள் கிடைக்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது 15 இந்திய மொழிகளில் 160 மில்லியன் மாதந்திர ஆக்டிவ் பயனர்களையும், 50 மில்லியனுக்கும் அதிகமான வீடியோ கிரியேட்டர்களையும் மோஜ் ஆப் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….