இந்தியாவுக்கு வரவுள்ள கடைசி ரஃபேல் போர் விமானங்கள்..!

பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016 ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 2020-ல் முதலாவதாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன.

அதன் பிறகு பல குழுக்களாக இதுவரை மொத்தம் 33 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 3 போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. அதற்கான இறுதிக்கட்ட சோதனைப் பணிகள் பிரான்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த கடைசி மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க படும் பட்சத்தில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே போடப்பட்டிருந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் நிறைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.