கோவாவில் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்..!

இந்த ஆண்டு உத்தரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் ஒன்றான கோவாவில் இன்று ஒரே கட்டமாக மாநிலத்திலுள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதியம் ஒரு மணிவரை 44.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடற்கரையை ஒட்டிய மாநிலமான கோவாவில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவுகள் மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி நிலவரப்படி 44.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவா மாநில முதல்வர் பிரமோத் சவந்த் போட்டியிடும் தொகுதியான சான்குலிம் தொகுதியில் இதுவரை அதிகபட்சமாக 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பைரோல் தொகுதியில் 51.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வால்பொய் தொகுதியில் குறைந்த பட்சமாக 39 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

கோவா மாநிலத்தில் பாஜகவிற்கு போட்டியாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் களம் இறங்கியுள்ளன. 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநில சட்டப்பேரவையில் பாஜகவை சேர்ந்தவர்கள் 17 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தற்போது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…