ஐந்து ஆண்டுகளுக்கு மின்சாரம் இலவசம்… உள்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மார்ச் 18 ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மார்ச் 10 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. மார்ச் 10-ல் பாஜக ஆட்சியை கைப்பற்றி மார்ச் 18 அன்று உங்கள் வீடுகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வந்து சேரும் என தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல் இரண்டு கட்ட தேர்தலில் மேற்கு உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வலுவிழந்து விட்டது. இனிவரும் அடுத்தகட்ட வாக்கு பதிவிலும் அக்கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.