வன்முறையை கட்டுப்படுத்த பாஜக வேண்டும்… பிரதமர் மோடி பேச்சு..!

இந்த ஆண்டு உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திரமோடி மாநிலத்தில் வன்முறையை கட்டுக்குள் வைக்க பாஜக வேண்டும் என பேசினார்.

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தால் கலவரக்காரர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். மாபியாக்கள் தொந்தரவு பாஜக ஆட்சியில் இருக்காது. மேலும், பெண்கள் பாதுகாப்பாக இருக்க பாஜகவின் ஆட்சி உத்தரபிரதேசத்தில் தேவை என பேசியுள்ளார்.

பாஜக ஆட்சியில் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாட அனுமதி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்தில் விரைந்து செயல்படுத்த படுகின்றன என்றார். துறவி ரவிதாஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி பேசியதாவது, நான் காசியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் காசியில்தான் துறவி ரவிதாஸ் பிறந்தார். அதன் காரணத்தினாலேயே கடவுள் என்னை காசிக்கு பணி செய்ய அனுப்பி உள்ளார் என்றார்.

உத்தர பிரதேசத்தில் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.