அனைவரும் மாநிலத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்…முதல்வர் வேட்பாளர் பேட்டி..!

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் மாநிலத்தில் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து திரும்பிய பகவத்சிங் இதனை தெரிவித்தார். அவருடன் அவரது தாயாரும் பஞ்சப் சட்ட மன்ற தேர்தலில் வாக்களித்தார். அப்போது பேசிய அவர், எனது மகன் எனக்கு ஏற்கனவே முதல்வர் தான் என்றார். கடவுளின் அருளால் மக்கள் அனைவருக்கும் அவரை பிடித்துள்ளது. அவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை 2.14 கோடி வாக்காளர்கள் முடிவு செய்திருப்பார்கள். பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. பல முனை போட்டி நிலவும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றது யார் ஆட்சியமைக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.
தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 10 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.