ஆட்சியை பிடிப்பது மட்டும் அரசியல் அல்ல… பாதுகாப்புத்துறை அமைச்சர் பேச்சு..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்து நான்காம் கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆட்சியைப் பிடிப்பது மட்டும் அரசியல் அல்ல. ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவது மற்றும் நாட்டினை கட்டமைப்பது போன்றவையே சிறந்த அரசியல் ஆகும் என பேசியுள்ளார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது, நாங்கள் அரசியலில் இருப்பது நாட்டினை ஆள்வதற்காக மட்டுமல்ல. நல்ல சமூகத்தை உருவாக்குவது மற்றும் இந்திய நாட்டினை கட்டமைப்பது போன்ற கடமைகள் எங்களுக்கு உள்ளன. சிக்கந்தர்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஒருபோதும் மக்களின் நம்பிக்கையை உடைந்து போக விடாது. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். பல கட்சிகள் வந்து சென்றாலும் பாஜக போன்ற யாரும் மக்களுக்கு சேவையாற்றவில்லை. நாங்கள் ஆர்டிகிள் 370-தை நீக்குவோம் என்று கூறினோம். அதை செய்து காட்டினோம். அதேபோல குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் என்றார்.

ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் முடிவடைந்து உள்ளன. நான்காம் கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 23 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.