இப்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமா… உத்தரப் பிரதேசத்தை கலக்கும் ஆசிரியர்கள்..!

இந்தியாவில் உத்திரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. ஐந்தாம் கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 27 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் உள்ள ஆசிரியர்கள் பிங்க் ராலி ஒன்றை நடத்தினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று ஆசிரியர்கள் பிங்க் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேரணியின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் விதமாக பெண் ஆசிரியர்கள் அனைவரும் பிங்க் நிற ஸ்கூட்டரில் அணிவகுத்து சென்றனர். மேலும், இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் பிங்க் நிற உடையணிந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் வாக்களிப்பதில் பெண்களின் சதவீதம் குறைவாக உள்ளது. இந்த நிலை மாறி அனைத்து பெண்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.

வாரணாசியில் உள்ள குறுக்குச் சாலையில் இருந்து தொடங்கிய இந்த பேரணி பத்து கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் அதே இடத்தில் வந்து முடிவடைந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, தேர்தலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. இந்தப் பேரணியின் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கமாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….