பிரதமர் தலைமையில் புதிய இந்தியா உருவாகியுள்ளது… பாஜக எம்.பி பேட்டி..!

நடிகையாக இருந்து பின்னர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய ஹேமா மாலினி பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் கடந்த 7 புதிய இந்தியா உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார். அதே பல அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டை உக்ரைன் ரஷ்யா இடையேயான விவகாரத்தில் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாலியா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது, அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் உக்ரைன் மற்றும் ரஷ்யா விவகாரத்தில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதன் மூலம் அவர் மிகச் சிறந்த உலகத் தலைவர் என்பது தெரிகிறது. அதேபோல உலக நாடுகள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது என்பதையும் உணர முடிகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகில் உள்ள சிறந்த தலைவர்களின் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். அவர் கடந்த 7 ஆண்டுகளாக புதிய இந்தியாவை உருவாக்கியுள்ளார். அந்தப் பணியில் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் இணைய வேண்டும் என்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…