மீண்டும் யோகி தான் முதல்வர் ஆவார்… அமைச்சர் அதிரடி..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் மாநிலத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், கேபினட் அமைச்சர் சித்தார்த் நாத் சிங் உத்திரபிரதேசத்தில் மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியிருப்பதாவது, முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொள்ளும் மக்கள் கூட்டமே அவர் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையாகும். அதுவே அவர் முதல்வர் ஆவதற்கு போதுமான சான்றாகும். நாங்கள் தேர்தலுக்கு முழுவதுமாக தயாராக உள்ளோம். மக்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அனுபவித்துவரும் பாதுகாப்பான வாழ்க்கையை மீண்டும் விரும்புவதாக நான் நினைக்கிறேன். அதனால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜக குறித்து பேசியதற்கு பதிலளித்தார். அதில், வருகிற மார்ச் 10 ஆம் தேதி அகிலேஷ் யாதவிற்கு மக்கள் யாருடைய பக்கம் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து. அப்போது பார்க்கலாம் யாருடைய நிலை என்ன ஆகிறது என்று என்றார்.

உத்தரபிரதேசத்தில் நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….