ரஷ்யாவோடு நிறுத்திக்கொள்ளுங்கள் …. ஹேக்கர்களுக்கு சவால் விட்ட  பாஜக  தேசிய தலைவர் ஜே.பி நட்டா

பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை ஹேக் செய்யப்பட்டது. அவரது டிவிட்டர் கணக்கில் ‘ரஷ்யா மக்களுடன் நில்லுங்கள்’ என்றும், கிரிப்டோகரன்சி நன்கொடைகளைக் கோரும் ட்வீட் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஜேபி நட்டாவின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பின்பு வெளியிடப்பட்ட பதிவுகளில், “ரஷ்யா மக்களுடன் நில்லுங்கள். இப்போது கிரிப்டோகரன்சி நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்னர் அதே பதிவு இந்தியிலும் இடப்பட்டது. மற்றொரு ட்விட்டில்,”மன்னிக்கவும், எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டது. உதவி தேவைப்படுவதால், ரஷ்யாவிற்கு நன்கொடை அளிக்க நான் இங்கு வந்துள்ளேன்” என்று பதிவிடப்பட்டது.

அதன்பின்னர் ஜேபி நட்டாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து உடனடியாக இந்த ட்வீட்கள் நீக்கப்பட்டன. “ஹேக் செய்யப்பட்ட பாஜக தேசிய தலைவரின் டிவிட்டர் கணக்கு உடனடியாக மீட்கப்பட்டது. அது இப்போது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது, ஹேக் செய்யப்பட்ட காரணத்தை அறிய ட்விட்டர் நிர்வாகத்திடம் பேசி வருகிறோம்” என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….