மாநில வளர்ச்சியில் அகிலேஷ் யாதவுக்கு அக்கறை இல்லை…யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று மாநிலத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் வளர்ச்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அக்கறை இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் கெய்ம்பியார்கஞ்ச் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இதனைத் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தின் போது அவர் பேசியதாவது, சமாஜ்வாதி கட்சியில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அகிலேஷ் யாதவ் கட்டுமானம், மருத்துவ வசதிகள் மற்றும் சாலைகள் போன்றவை எங்களுக்கு முக்கியமில்லை என பதிலளித்தார். சமாஜ்வாதி கட்சியினர் அவர்களின் லாக்கரில் பணம் சேர்த்து வைத்துக் கொள்வதே முக்கியம் என்றார்.

கொரோனா பரவலின் போது சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் தடுப்பூசிகள் மக்களுக்கு கிடைக்காமல் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கும் என குற்றம் சாட்டினார். ஆனால், பாஜக ஆட்சியில் கொரோனா தடுப்பூசி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இன்று உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் நடந்து வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published.