பெரும்பான்மை உறுதியாகிவிட்டது… உள்துறை அமைச்சர் பேச்சு..!

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று உன் துறை அமைச்சர் அமித்ஷா நடந்து முடிந்த ஐந்து கட்ட தேர்தலிலேயே பாஜகவிற்கு பெரும்பான்மை உறுதியாகி விட்டது என தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குஷிநகரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். உத்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் ஐந்து கட்ட வாக்கு பதிவிலேயே பாஜக பெரும்பான்மை பெற்று விட்டது என்றார். ஆறாவது மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் பாஜக 300 தொகுதிகளுக்கு மேலாக எத்தனை மொத்த தொகுதி பலத்துடன் ஆட்சி அமைக்கப் போகிறது என்பதற்கான தேர்தலாகும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் உத்தரப்பிரதேச மக்கள் நரேந்திர மோடி அவர்களை பிரதமர் ஆக்கியது. முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிலிருந்து பாஜகவிற்கான வரவேற்பு மக்களிடம் அமோகமாக பெருகியுள்ளது. எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசிய அவர், கொரோனா தடுப்பு ஊசி குறித்து எதிர்க்கட்சிகள் மக்களிடம் பயத்தை ஏற்படுத்தினர் என்றார். ஆனால், பாஜக தலைமையிலான அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி பல்வேறு உயிர்களை காப்பாற்றி உள்ளது என்றார்.

உத்தரபிரதேசத்தில் 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் ஆறாம் கட்ட தேர்தல் வருகிற மார்ச் 3 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…