பாஜகவை வெற்றி பெற வைக்க பகுஜன் சமாஜ் கட்சி உதவி… பாரதிய சமாஜ் கட்சி தலைவர் குற்றச்சாட்டு..!

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் 6-ஆம் கட்ட தேர்தல் வருகிற மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதி பாஜகவுக்கு உதவி செய்கிறார், அமித்ஷாவின் அறையில்தான் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டனர் என்று எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, பாஜக தலைவர் அமித்ஷாவின் அறையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். ஆளும் பாஜகவை வெற்றிபெற வைக்கவே மாயாவதியின் அணி தேர்தலில் போட்டியிடுகிறது.

2022 உத்தரப் பிரதேச தேர்தலில் கூட்டணி கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக வெறுப்பை மட்டுமே பரப்புகிறது, மக்கள் எப்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. அனைத்து மண்டலங்களிலும், மாநில மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று கூறினார்.

தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து எஸ்பிஎஸ்பி கட்சி 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது, உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…