நான் போராளி…மாஸ் காட்டிய மம்தா பானர்ஜி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கு வந்தபோது அவர்களுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மேலும்,மம்தா பானர்ஜியின் வருகையின் போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நான் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வந்தபோது பாஜகவினர் என் மீது தாக்குதல் நடத்தியது அவர்கள் ஆட்சியில் இருந்து வெளியேறுவதைக் குறிக்கிறது என்று சமாஜ்வாதி கட்சி நடத்திய பேரணியில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது, கடந்த காலங்களில் நான் பலமுறை தாக்கப்பட்டேன், தடியடியால் பாதிக்கப்பட்டேன், ஆனால் ஒருபோதும் பணிந்ததில்லை…நான் கோழை அல்ல, நான் போராளி. நான் வாரணாசிக்கு வந்தபோது பாஜகவினர் என் மீது தாக்குதல் நடத்தியது என்பது அவர்கள் ஆட்சியில் இருந்து வெளியேறுவதைக் குறிக்கிறது என்று கூறினார்.உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த மம்தா பானர்ஜி, புதன்கிழமை மாலை வாரணாசியில் ‘கங்கா ஆரத்தி’யில் கலந்துகொள்வதற்காக சென்றபோது அவருக்கு எதிராக இந்து யுவ வாஹினி அமைப்பினர் அவரது கான்வாய் முன் கூடி முழக்கங்களை எழுப்பி, கருப்புக் கொடிகளை அசைத்து கோஷங்களை எழுப்பினர், இதனைத் தொடர்ந்து மம்தா தனது வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் நின்றார்.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநிலத்தில் 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற மார்ச் 7 அன்று நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.