எதிர்க்கட்சிகளை சரமாரியாக விளாசித் தள்ளும் முதல்வர்..!

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சிகளை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். மாநிலத்தில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்து உள்ளது. இதனையடுத்து ஏழாவது கட்ட மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளார்.
மிர்சாபூர் சட்டமன்ற தொகுதி வருகிற மார்ச் 7-ஆம் தேதி தேர்தலை சந்திக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் மிர்சாபூரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது , மக்களை கடந்த ஆட்சியில் ஆட்டி படைத்த மாபியாக்களுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் ஒரு சொட்டு குடிநீர் இன்றி தவிக்க காரணமானவர்களுக்கு ஒரு ஓட்டு கூட இல்லாமல் செய்ய வேண்டும். இனி உத்தரப் பிரதேச மக்களை யாராலும் அடக்கியாள முடியாது என்றார். மேலும், அவர்களின் உழைப்பையும் சுரண்ட முடியாது எனவும் தெரிவித்தார்.
54 தொகுதிகளை கொண்ட மிர்சாபூரில் வருகிற மார்ச் 7-ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.