மாணவர்கள் வெளியே வரவேண்டாம்… வெளியுறவுத்துறை அறிவுரை..!

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்தியா, ரஷ்யா மற்றும் உக்ரைன் தங்களது பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கிடையில், உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இந்திய அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது.

கெர்சன், எனர்கோடர், மிக்கலேவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றிய ரஷ்யப் படைகள், கிழக்குப் பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் முயன்று வருகின்றன. இதன் காரணமாக கிழக்குப் பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதையடுத்து மீட்புப் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியிருந்தது.

அதே நேரம் பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இதைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதன்படி, உக்ரைனில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணியில் இருந்து தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள், உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்லும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.மாணவர்களுடன் அமைச்சகமும், இந்திய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதனால் மாணவர்கள் அவசரப்பட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….