உக்ரைனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்கள்… வரவேற்ற எல்.முருகன்..!

கடந்த சில தினங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, உக்ரைனில் இருந்து தங்களது நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் இறங்கியுள்ளன. இந்திய மக்கள் அனைவரும் விமானம் மூலம் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அதேபோல, இன்று தமிழக மாணவர்கள் பலர் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.
உக்ரைனில் போரின் காரணமாக தவித்து வரும் இந்திய மக்களை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை தாயகம் அழைத்து வருகிறது. அந்த வரிசையில் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் எல்லைகளில் இருந்து மீட்கப்பட்ட 198 தமிழக மருத்துவ மாணவர்கள் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர்.
டெல்லி விமானநிலையத்திற்குச் சென்று அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். பிரதமரின் முயற்சியால் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களை வரவேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.
உக்ரைனில் சிக்கித் தவித்து வரும் இந்திய மக்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.