பஞ்சாபில் எங்களுக்கு ஆதரவு உள்ளது… ஜே.பி.நட்டா பேச்சு..!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாஜகவிற்கு பஞ்சாபில் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு நல்ல முடிவுகள் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இணைந்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவுக்கு மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வருகிற மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
பஞ்சாப் மக்களின் ஆதரவு குறித்து ஜே.பி.நட்டா பேசியதாவது, பஞ்சாப் மாநிலத்தில் பாஜக முதன்முறையாக 65-க்கும் அதிகமாக தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளது. மக்களிடம் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உத்திரப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்கும் என்றார். பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.