உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்… அமைச்சர் நம்பிக்கை..!

உத்திரபிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என அமைச்சர் ப்ரிஜேஷ் பதக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு என கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. அதனை அவர் இவ்வாறு கூறுகின்றார் என்பது புரியாத புதிராக உள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறுவது அவரின் தேர்தல் தோல்வி பயத்தை காட்டுகிறது என்றார். மேலும், இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தக் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவிற்கு சாதகமாகவே உள்ளன. அதனை நாளை நீங்கள் தேர்தல் முடிவின் போது தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிர்க்கட்சியினருக்கு அவர்கள் தேர்தலில் தோற்கப் போவது தெரிந்துவிட்டது. அதனால்தான், பாஜகவின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் ஏதேதோ குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என்றார்.

முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்கு இயந்திரங்களில் கோளாறு எனவும், அதனை ஆளுங்கட்சியினர் இடம் மாற்றுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ப்ரிஜேஸ் பதக் தற்போது பதில் அளித்துள்ளார்.

நாளை 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….