பள்ளி மாணவனுக்கு இவ்வளவு புரிதலா… கடிதம் மூலம் பாராட்டிய பிரதமர்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டேராடூனில் உள்ள 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடிதம் மூலம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த இளம் வயதில் உங்களது சிந்தனையும், கலைத்திறனும் நாட்டை பற்றிய புரிதலும் என்னை வியக்க வைக்கிறது என்று பிரதமர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டேராடூனைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் அனுராக் ரமோலா கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமரின் குழந்தைகளுக்கான தேசிய விருதினை வென்றார். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மாணவர்களுடன் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலமும், தேர்வினை எவ்வாறு பயமின்றி எதிர்கொள்வது என்றும் மாணவர்களுடன் பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது அனுராக் ரமோலா என்ற மாணவனின் படைப்பை பிரதமர் மோடி கடிதம் மூலம் பாராட்டியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, உங்களுக்கு இருக்கும் அறிவுத்திறன் மற்றும் புரிந்து கொள்ளும் தன்மை உங்களுடைய எழுத்துக்களிலும் மற்றும் ஓவிய படைப்பிலும் தெளிவாக தெரிகிறது. இந்திய நாடு குறித்து உங்களது தெளிவான சிந்தனை நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்த இளம் வயதில் உன் வாங்கிக் கொள்ளும் திறன் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களது இந்த சிந்தனை எதிர்காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த இந்திய குடிமகனாக இருப்பதற்கு வழி வகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மாணவர் அனுராக் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள்தான் என்னுடைய உத்வேகம், உங்களைப் பார்த்து நான் வியப்படைகிறேன். கடினமான சூழலிலும் பொறுமையை இழக்காமல் சிந்திக்கும் உங்களது ஆளுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.