இனி விரைவு ரயில்களில் இவை வழங்கப்படும்… ரயில்வே அறிவிப்பு!

விரைவு ரயில்களில் ஏ.சி. பெட்டிகளில் மீண்டும் போர்வை, கம்பளிகள் வழங்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘கரோனா விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்ததால், ரயில்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் ரயில்களுக்குள்ளே சணல், கம்பளிப் போர்வைகள் மற்றும் திரைத் துணிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள ரயில்வே நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. உடனடியாக இது அமலுக்கு வருகிறது. முன்புபோல பயணிகளுக்கு கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.