இவன் என்னுடைய மகன் அல்ல, மோடியின் மகன்… உருக்கமான பேட்டி..!

கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது. ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தது. இந்நிலையில், போர் காரணமாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் களம் இறங்கின. அதன்படி உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்களை ஆபரேஷன் கங்கா என்ற முயற்சியின் மூலம் தாயகத்திற்கு மத்திய அரசு பத்திரமாக மீட்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர் ஒருவரின் தந்தை இனி இவன் என் மகன் அல்ல, பிரதமர் மோடியின் மகன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

சஞ்சய் பண்டிதா என்பவரின் மகன் துருவ். மேற்படிப்புக்காக உக்ரைன் சென்ற துருவ் போரின் காரணமாக அங்கு சிக்கி தவித்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் நாடு திரும்பியுள்ளார். உக்ரைனிலிருந்து திரும்பியவரை, கண்ணீர் மல்க அவரது தந்தை வரவேற்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, என் மகன் துருவ் உக்ரைனின் சுமி பகுதியிலிருந்து நாடு திரும்பியுள்ளார். இனி அவன் என் மகனல்ல, பிரதமர் மோடியின் மகன். சுமியின் சூழ்நிலையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. கடவுளுக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.