ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு… போலீஸ் ஒருவர் கவலைக்கிடம்..!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். அவரது நிலைமை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீ நகர் பகுதியில் ஜூனிபார் என்ற இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் காயமடைந்துள்ளார் மற்றொருவர் தப்பித்து இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காவல்துறை அதிகாரியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகளை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.