ஊழலை தடுக்க தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தும் பஞ்சாப்..!

பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து, பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே பஞ்சாபில் ஊழலை தடுக்க தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல் குறித்த புகார்களைப் பதிவு செய்ய இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாநில முதல்வர் பகவந்த் மான் ஷஹீத் திவாஸ் தினமான இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த இலவச உதவி எண்ணை அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது,

தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த வாட்ஸ்அப் எண் ( 9501200200 ) என்னுடைய தனிப்பட்ட எண்ணாகும். இந்த எண்ணுக்கு பஞ்சாப் மக்கள் ஊழல் குறித்த புகார்களை வீடியோவாகவோ அல்லது ஆடியோவாகவோ ஓம் அனுப்பலாம். மேலும், புகார் ஆகவும் எழுதி அனுப்பலாம். நீங்கள் கொடுக்கும் புகார்களின் மீது நான் தனி கவனம் செலுத்தி முறையான நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

ஷஹீத் திவாஸ் தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் போன்றோர் நினைவுகூறப்பட்டனர். மேலும், மாநிலத்தில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.