மிசோரத்தில் நிலநடுக்கம்..!

வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இதனை இந்திய நில நடுக்க ஆராய்ச்சி மையம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலத்தின் தெற்குப் பகுதியான தென்சாலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சரியாக இந்த நிலநடுக்கம் மதியம் 12:50-க்கு பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தனது டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மிசோரம் மாநிலத்தின் தென்சாலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 24 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது. சிறிய அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.