மாதம் ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும்..? தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே கிண்டல்.

விலைவாசி உயர்வு என்ற வார்த்தையை கேட்கும்போதே நடுத்தர மக்களின் குமுறலானது மேலோங்கி ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது.
தற்போது பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.80 காசுகள் மற்றும் சமையல் எரிவாயு விலையானது ரூ.50 உயர்ந்துள்ள நிலையில் அதை கண்டிக்கும் விதமாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே என்பவர் மாதம் ஒரு முறை தேர்தல் நடந்தால் மட்டுமே இந்த விலைவாசி ஆனது ஒரே மாதிரி இருக்கும் என கிண்டலாக கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து, முடிக்கும் வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்ததையும் எம்.பி சுப்ரியா சூலே சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்த விலைவாசி உயர்வை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.