‘சேரிகளில் வசிப்பவர்கள் பற்றிய டேட்டா எங்களிடம் இல்லை’… கைவிரித்த மத்திய அரசு!

Slam

நாட்டில் தற்போது சேரிகளில் வாழும் மக்கள் குறித்த விவரங்கள் அரசிடம் இல்லை என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குடிசை பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை மத்திய அரசு கவனத்தில் எடுத்து உள்ளதா? நாட்டிலுள்ள சேரிகளில் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி உள்ளதா? என மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை இணை அமைச்சர் கவுசில் கிஷோர், கடந்த 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 5,23,71,589 பேர் சேரிகளில் வாழ்ந்ததாகவும்,2011ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை அதிகரித்து 6,54,94,604 ஆக இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2002ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த நாட்டில் 51,688 சேரிகள் இருந்ததாகவும் இதன் எண்ணிக்கை 2012ம் ஆண்டில் 33,510 ஆக குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், நாட்டில் தற்போது சேரிகளில் வாழும் மக்கள் தொகை மற்றும் சேரிகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை. ஏனெனில், 2011ம் ஆண்டுக்குப் பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தப்படாததால் அந்த விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….