அப்போ கவர்னர், இப்ப அமைச்சர்… கலக்கும் பேபி ராணி..!

உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். எக்னா மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் பேபி ராணி ஆக்ரா கிராமப்புற தொகுதியிலிருந்து போட்டியிட்டார். மேலும், பேபி ராணி ஆக்ராவின் முதல் பெண் மேயரும் ஆவார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இன்று மொத்தமாக 52 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 5 பேர் பெண்கள். பதவி ஏற்ற 5 பெண் அமைச்சர்களில் பேபி ராணியும் ஒருவர்.

பேபி ராணியை தவிர, குலாப் தேவி, பிரதீபா சுக்லா, ராஜனி திவாரி மற்றும் விஜயலட்சுமி கௌதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இன்று உத்தரபிரதேச மாநிலத்தின் எக்னா மைதானத்தில் முதலில் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் முன்னிலையில் பதவி ஏற்றார். அந்த நிகழ்வின் போது உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…